| ADDED : நவ 27, 2025 02:01 AM
கரூர், நகரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாநில சிறுபான்மையினர் நல சிறப்பு குழு ஆய்வுக் கூட்டம், கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது.மாநில சிறுபான்மையினர் நல சிறப்பு குழு உறுப்பினர் மற்றும் எம்.எல்.ஏ., இனிக்கோ இருதயராஜ் பேசியதாவது:காலை உணவு திட்டத்தை, அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளுக்கும் அதை நீட்டித்துத் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. பொருளாதாரத்தில் இக்கட்டான சூழ்நிலையிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டத்தை நீட்டித்து தரப்பட்டுள்ளது. மேலும், புதுமைப் பெண் திட்டத்தையும் அரசு தந்துள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு கல்லறை தோட்டம் மற்றும் கபர்ஸ்தான் வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தோம். மாவட்ட தலைநகரங்களிலேயே, கல்லறை தோட்டங்கள் உடனடியாக அமைத்துத் தர வேண்டும் என்று மாவட்ட அரசாணை வெளியிட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.கூட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, குளித்தலை சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ, மாநில சிறுபான்மையினர் நல சிறப்பு குழு உறுப்பினர் இமானுவேல், துணை மேயர் சரவணன், மண்டலக்குழு தலைவர்கள் கனகராஜ், ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.