தான்தோன்றிமலை அரசு கல்லுாரிக்கு சிறப்பு பஸ் விட மாணவர்கள் கோரிக்கை
கரூர்: தான்தோன்றிமலை அரசு கல்லுாரிக்கு காலை, மாலை நேரங்-களில், ஸ்பெஷல் பஸ் விட வேண்டும் என, கல்லுாரி மாணவ, மாணவியர் கோரிக்கை வைத்துள்ளனர்.கரூர் அருகே உள்ள தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லுா-ரியில், மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, தான்தோன்றிமலை அரசு கல்லுாரிக்கு அரசு பஸ்களில் தான், அதிகளவில் மாணவ, மாணவியர் பயணம் செய்-கின்றனர். ஆனால், வழக்கமாக பிற பகுதிகளுக்கு, செல்லும் பஸ்-களில் தான் மாணவ, மாணவியர் கல்லுாரிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால், பஸ்களில் போதிய இடம் இல்லாதால், மாணவ, மாணவியர் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி பஸ்சின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து மாணவர்கள் படுகாயமடைவது தொடர்க-தையாக உள்ளது. மாணவ, மாணவியர் வசதிக்காக, கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லுா-ரிக்கு, ஸ்பெஷலாக காலை, மாலை நேரங்களில் தனி பஸ்களை இயக்க, கரூர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.