உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கார் மோதி விபத்து வாலிபர் படுகாயம்

கார் மோதி விபத்து வாலிபர் படுகாயம்

கார் மோதி விபத்துவாலிபர் படுகாயம்அரவக்குறிச்சி, நவ. 21-அரவக்குறிச்சி அருகே உள்ள சீத்தப்பட்டி காலனி நேரு நகரை சேர்ந்தவர் கணேசன் மகன் பிரதீப், 24. இவர், சீத்தப்பட்டி காலனி அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே சாலையில் கர்நாடகா வாகன எண் பதிவு கொண்ட கார், பிரதீப் ஓட்டி சென்ற டூவீலரின் பின்னால் மோதியது. இந்த விபத்தில் வாகனத்துடன் நிலைத்தடுமாறி கீழே விழுந்த பிரதீப் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ