உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஓடும் பஸ்சில் நெஞ்சுவலி ஏற்பட்டும் பயணிகளை காப்பாற்றிய டிரைவர்

ஓடும் பஸ்சில் நெஞ்சுவலி ஏற்பட்டும் பயணிகளை காப்பாற்றிய டிரைவர்

அரவக்குறிச்சி : அரசு போக்குவரத்து கழக விரைவு பஸ், ஈரோடு மாவட்டம், அந்தியூரில் இருந்து நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு மதுரைக்கு புறப்பட்டது. அரவக்குறிச்சி வழியாக, மதுரை செல்லும் பஸ்சை அத்தாணியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 45, என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக கருணாநிதி என்பவர் உடன் வந்தார். பஸ்சில், 45 பயணிகள் பயணம் செய்தனர். அரவக்குறிச்சி நகரில் பஸ் நுழைந்த போது, டிரைவர் கிருஷ்ணமூர்த்திக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.உடனே, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வெளியே பஸ்சை நிறுத்தி விட்டு நெஞ்சு வலி பற்றி விவரம் கூறியுள்ளார். அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் காத்திருந்த பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். காலை 10:00 மணி அளவில் சிகிச்சை குணமடைந்து கிருஷ்ணமூர்த்தி புறப்பட்டு சென்றார். மாற்று ஓட்டுனர் வரவழைக்கப்பட்டு பஸ் மதுரைக்கு புறப்பட்டது.ஓடும் பஸ்சில் நெஞ்சுவலி வந்தும், தைரியமாக பயணிகளை காப்பாற்றி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்ற அரசு பஸ் டிரைவர் கிருஷ்ணமூர்த்தியை பயணிகள், பொதுமக்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை