| ADDED : டிச 05, 2025 11:00 AM
கரூர்: அணுகு சாலை குறுகலாக இருப்பதால், வாக-னங்கள் செல்ல சிரமம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.கரூர், சேலம் நெடுஞ்சாலையில் உள்ள மேம்பா-லத்தின் கீழ்புறம் அணுகு சாலை உள்ளது. இவ்வ-ழியாக திருப்பூர், ஈரோடு, கோவை, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் வந்து செல்கின்றன. இங்குள்ள ரவுண்டானா அணுகு சாலையில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. அதில், குறைந்தது நான்கு நிமிடங்கள் நிர்ணயிக்-கப்பட்டுள்ளது.இதனால் காலை, மாலை வேளைகளில் வாக-னங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்-கின்றன. சாலை குறுகலாக இருப்பதால், சிக்னல் விழுந்ததும் அனைத்து வாகனங்களும் செல்ல முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. நெரிசலில் ஊர்ந்து செல்வதற்குள், மீண்டும் சிக்னல் விழுந்து விடுகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து, கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் வந்து செல்லும் பஸ்கள் நெருக்கடியில் இருந்து மீண்டு வர, அரைமணி நேரத்திற்கு மேல் ஆகி விடுகிறது. குறுகிய சாலையை அகலப்ப-டுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியு-றுத்தி வருகின்றனர்.