உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குவாரியில் விழுந்து உயிரிழந்த மாணவன் உடலை வாங்காமல் திரும்பிய உறவினர்கள்

குவாரியில் விழுந்து உயிரிழந்த மாணவன் உடலை வாங்காமல் திரும்பிய உறவினர்கள்

கரூர்: கரூர் அருகே, கல் குவாரியில் விழுந்து உயிரிழந்த பள்ளி மாணவன் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், நேற்று இரவு திரும்பி சென்றனர்.கரூர் மாவட்டம், புன்னம் ஆலம்பாளையம் காலனி பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார், 42; என்பவரது மகன் ராகுல், 14; கரூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மதியம், ராகுல் அதே பகுதியில் உள்ள, கைவிடப்பட்ட கல் குவாரி பகுதியில், சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். அப்போது, திடீரென தவறி விழுந்த ராகுல், கல்குவாரியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். போலீசார் ராகுல் உடலை கைப்பற்றி, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்தனர்.நேற்று காலை, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு வந்த ராகுல் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், கல் குவாரியை மூடாத உரிமையாளர், கனிம வளத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்ககோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்துார் பாண்டியன் உள்ளிட்ட போலீசார் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.இதனால் நேற்று இரவு, 7:00 மணி வரை ராகுலின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் இருந்து, வீடுகளுக்கு திரும்பி சென்றனர். இதனால், மாணவன் ராகுலின் உடல் கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சவக்கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை