உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையோரம் குப்பை துர்நாற்றத்தால் தவிப்பு

சாலையோரம் குப்பை துர்நாற்றத்தால் தவிப்பு

கரூர், சாலையில் கொட்டப்படும் குப்பைகள் அகற்றப்படாததால், துர்நாற்றம் வீசுகிறது.கரூர் மாநகராட்சியை அடுத்து, காதப்பாறை கீழ்பாகம் கிராம பஞ்சாயத்து உள்ளது. இதில் வாங்கல் அருகம்பாளையம் சாலையில் உள்ள குப்பை அள்ளப்படாமல் தேங்கியுள்ளது. மேலும் குப்பைகள் சாலையில் சிதறியுள்ளன. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். பலமுறை பஞ்., நிர்-வாகத்திடம் புகார் கொடுத்தும் எந்த பயனும் இல்லை என, அப்-பகுதியினர் புலம்பி வருகின்றனர். மழை பெய்து வருவதால், தேங்கியுள்ள குப்பையில் இருந்து துர்-நாற்றம் வீசுகிறது. கிராம பஞ்., பகுதியில் தொற்று நோய் பரவும் நிலை உருவாகியுள்ளதால், குவிந்துள்ள குப்பையை அகற்ற பஞ்., நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோரங்களில் குப்பை கொட்டுவதற்கு, தேவையான குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி