உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கணவர், குழந்தைகள் கண் எதிரிலேயே பெண் பலி

கணவர், குழந்தைகள் கண் எதிரிலேயே பெண் பலி

குளித்தலை: பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண், கணவர், குழந்தைகள் கண் எதிரிலேயே பரிதாபமாக இறந்தார். குளித்தலை அடுத்த, புத்துார் பஞ்., பெரிய புத்துார் கிராமத்தை சேர்ந்தவர் சேகர், 42. கூலித்தொழிலாளி. இவரது மனைவி மாலதி, 32. வயலுார் கிராமத்தில் கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு நேற்று காலை, 10:30 மணியளவில் யமஹா பைக்கில் சேகர், தன் இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவி மாலதி பின்னால் அமர வைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார். கள்ளை - மேலப்பட்டி நெடுஞ்சாலையில், புதிதாக கட்டப்பட்ட பணிகள் நிறைவு பெறாத பாலத்தில் செல்லும்போது, மாலதி தன் கையில் வைத்திருந்த கட்டை பை தவறி கீழே விழுந்தபோது, அதை பிடிக்க முற்பட்டார். அதில் அவர் தவறி கீழே விழுந்தில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கணவர், குழந்தைகள் கண் எதிரிலேயே மாலதி இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.தோகைமலை போலீசார் சடலத்தை கைப்பற்றி, உடல் கூறு ஆய்வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை