உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு கல்லுாரியில் படிவங்களை செயலியில் பதிவேற்றும் பணி தீவிரம்

அரசு கல்லுாரியில் படிவங்களை செயலியில் பதிவேற்றும் பணி தீவிரம்

கரூர், கரூர் தான்தோன்றிமலை அரசு கல்லுாரியில், கரூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் படிவங்களை, செயலியில் பதிவேற்றம் செய்யும் பணி நடக்கிறது. இதை, கலெக்டர் தங்கவேல் பார்வையிட்ட பின் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில் கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை மற்றும் அரவக்குறிச்சி ஆகிய, 4 தொகுதிகளில், 8 லட்சத்து, 98 ஆயிரத்து, 362 வாக்காளர்கள் உள்ளனர். 1,055 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு தேடிச் சென்று, வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்குவது, பூர்த்தி செய்த படிவங்களை திரும்பப் பெறும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.பூர்த்தி செய்த படிவங்களை சமர்ப்பிக்க வரும் டிச., 4 கடைசி நாளாகும். 10 நாட்களே உள்ள நிலையில் வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்த படிவங்களை பெறுவது மற்றும் பெறப்படும் படிவங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் துரிதமாக நடக்கிறது.மாவட்டத்தில் இறந்தவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் தவிர, மற்ற வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி நடக்கிறது. வெளியூர் சென்றுள்ள வாக்காளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட படிவங்களை, இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணியில் வருவாய் துறையினர், கூட்டுறவு துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அரசு துறைகளின் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணியில், 700க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.ஆய்வின் போது கரூர் தாசில்தார் மோகன்ராஜ் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ