உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வெங்கடரமண சுவாமி கோவிலில் இன்று தெப்பத்தேர் உற்சவம்

வெங்கடரமண சுவாமி கோவிலில் இன்று தெப்பத்தேர் உற்சவம்

கரூர், : தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், இன்று மாசிமக தெப்பத்தேர் உற்சவம் நடக்கிறது. அதற்காக, தெப்பத்தை தயார்ப்படுத்தும் பணிகள் நேற்று நடந்தது.பிரசித்தி பெற்ற, கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் மாசி மக தெப்பத் திருவிழா சிறப்புடன் நடைபெறும். நடப்பாண்டு தெப்பத் திருவிழா கடந்த, 16ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று இரவு தெப்பத்தேர் உற்சவம் நடக்கிறது. அதற்காக, தெப்பத்தை தயார்ப்படுத்தும் பணிகள் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. வரும், 29 ல் வெள்ளி கருடசேவை, மார்ச், 2 ல் ஆளும் பல்லாக்கு, 3ல் ஊஞ்சல் உற்சவம், 4 ல் புஷ்பயாகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ