உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தோகைமலை யூனியன் கூட்டம்: 28 தீர்மானங்கள் நிறைவேற்றம்

தோகைமலை யூனியன் கூட்டம்: 28 தீர்மானங்கள் நிறைவேற்றம்

குளித்தலை: குளித்தலை அடுத்த, தோகைமலை யூனியன் குழு சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் சுகந்தி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பாப்பாத்தி, கமிஷனர் பாலசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய விபரம் வருமாறு:முருகேசன்: (தி.மு.க.,): கழுகூர் பஞ்., அ.உடையாபட்டியில் செயல்பட்டு வரும், 100 நாள் வேலை (கிராம சேவை) அலுவலகத்தில், பொதுமக்கள் வசதிக்காக ஜெராக்ஸ் மிஷன் அமைக்க வேண்டும்.யூனியன் குழு தலைவர்: கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.புவனேஸ்வரன்: (தி.மு.க.,): சின்னரெட்டிப்பட்டியில் இருந்து, பொன்னம்பட்டி வழியாக பாதிரிப்பட்டி வரை செல்லும் சாலை, 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இங்கு புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்.யூனியன் கமிஷனர்: பொறியாளர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.புவனேஸ்வரன்: பொருந்தலுார் பஞ்., பாறைப்பட்டி காலனி பகுதிக்கு பழுதான குழாயை சரி செய்து குடிநீர் வழங்க வேண்டும்.இதேபோல் பராமரிப்பு பணிகள், பொது சுகாதாரம், குடிநீர் தேவை உள்பட பல்வேறு பணிகள் தேர்வு செய்தல், செலவினங்கள் உள்பட, 28 தீர்மானங்களை இளநிலை உதவியாளர் அண்ணாசாமி வாசித்த பின்பு நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ