உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சி.பி.ஐ.,யிடம் மூன்றாவது முறையாக டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆஜர்

சி.பி.ஐ.,யிடம் மூன்றாவது முறையாக டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆஜர்

கரூர்: கரூர் த.வெ.க., கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்-பாக, மூன்றாவது முறையாக ஆஜரான கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ண-னிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்-தினர்.கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த செப்., 27ல் நடந்த த.வெ.க., பிரசார கூட்டத்தில், 41 பேர் நெரி-சலில் சிக்கி உயிரிழந்தனர். இது தொடர்பாக, சி.பி.ஐ., எஸ்.பி., பிரவீன்குமார் தலைமையில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நேற்று, கரூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளா-கத்தில் உள்ள, சி.பி.ஐ., அலுவலகத்துக்கு கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் உள்பட 7 போலீசார் ஆஜராயினர். அவர்களிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக, மூன்றா-வது முறையாக இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இவர்தான், த.வெ.க., பிரசார கூட்ட நெரிசல் தொடர்பாக, எப்.ஐ.ஆர்., பதிவு செய்தார் என்பது குறிப்பிடதக்-கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை