மேலும் செய்திகள்
பக்தர்கள் மீது மாடு தாண்டும் திருவிழா
05-Oct-2025
ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் விபரீத முடிவு
05-Oct-2025
அரசு பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
05-Oct-2025
கரூர் : கரூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருமாநிலையூரில் ரவுண்டானா பாலத்தில் போக்குவரத்து விதிமுறை விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.கரூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பாலங்களை, அரசியல் கட்சியினர் மற்றும் தனியார் நிறுவனங்கள், விளம்பர களமாக பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, கரூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருமாநிலையூரில் ரவுண்டானாவில் உள்ள பாலத்தில் சுவர்கள், பாலத்தின் கைபிடிகளில் அரசியல் விளம்பரம் ஆக்கிரமித்துள்ளது.இதனால், சுவர் விளம்பரங்கள், பகல் நேரங்களில், 'பளிச்' என, காட்சி அளித்து வரும் நிலையில், இரவு நேரங்களில் வாகனங்களின் விளக்கு ஒளியில் எதிரொலிக்கின்றன. இதனால், பாலங்களின் அருகில், அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இந்த விளம்பரங்களை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திண்டுக்கல் திட்ட இயக்குனருக்கு, கரூர் பா.ஜ., மாவட்ட தலைவர் செந்தில்நாதன் புகார் மனு அளித்தார். இவற்றை அகற்றுமாறு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டது.தொடர்ந்து, விளம்பரங்களை அகற்றும் பணிக்கு பாதுகாப்பு வழங்க கோரி, இந்த சாலையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் சார்பில் கலெக்டரிடம் கடிதம் வழங்கப்பட்டது. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை என்பதால், விளம்பரங்கள் அகற்றப்படாமல் இருந்து வந்தது.கடந்த மார்ச் மாதம் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. தேசிய நெடுஞ்சாலை உள்ள சுவர்களில் விளம்பரங்கள் அகற்றப்பட்டன. மீண்டும் யாரும் விளம்பரம் செய்ய கூடாது என்ற நோக்கில் கரூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருமாநிலையூரில் ரவுண்டானாவில் உள்ள பாலத்தில் சுவர்கள், பாலத்தின் கைப்பிடிகளில் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் ஓவியங்கள் வரைப்பட்டு வருகின்றன. இனியாவது, சுவர்களில் அரசியல் கட்சிகள் விளம்பரங்களை ஆக்கிரமிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025