உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பஞ்சப்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் ஹைமாஸ் விளக்கு பழுதால் அவதி

பஞ்சப்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் ஹைமாஸ் விளக்கு பழுதால் அவதி

கிருஷ்ணராயபுரம், பஞ்சப்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள, ஹைமாஸ் விளக்குகள் பழுது காரணமாக இருளில் மூழ்கியுள்ளது.கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டி கடைவீதி அருகில் பஸ் ஸ்டாப் உள்ளது. இப்பகுதி வழியாக பொதுமக்கள் குளித்தலை, தரகம்பட்டி, கரூர், திருச்சி பகுதிகளுக்கு பஸ்களில் ஏறி சென்று வருகின்றனர். பஸ் ஸ்டாப் அருகில் ஹைமாஸ் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விளக்குகளில் பழுது ஏற்பட்டு எரிவதில்லை. இதனால் போதிய வெளிச்சம் இன்றி, பஸ் ஸ்டாப் பகுதி, கடைவீதி இருளில் மூழ்கியுள்ளது. வெளிச்சம் இன்றி இருப்பதால் சாலை வழியாக செல்லும் போது, மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, பஞ்சாயத்து நிர்வாகம் பழுதடைந்துள்ள ஹைமாஸ் விளக்குகளை, எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை