உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லாரி திருட்டு; டிரைவர் கைது

லாரி திருட்டு; டிரைவர் கைது

கரூர்:கரூர் அருகே, நிறுத்தப்பட்ட டாரஸ் லாரியை திருடி சென்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், ராயனுார் அண்ணா நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ், 40. லாரி அதிபர். இவர் கடந்த மாதம், 15ல் தொழில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இதனால், டாரஸ் லாரி மோகன் ராஜின் வீட்டுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில் கடந்த மாதம், 18ல் டாரஸ் லாரியை காணவில்லை. இதுகுறித்து, மோகன் ராஜின் மனைவி தனலட்சுமி, 34, போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய தான்தோன்றிமலை போலீசார், டாரஸ் லாரியை திருடியதாக, சேலம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த டிரைவர் மணி, 40, என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மணி, தற்கொலை செய்து கொண்ட மோகன்ராஜிடம் வேலை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை