உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டிராக்டரில் மணல் கடத்தல் இருவர் கைது; வாகனம் பறிமுதல்

டிராக்டரில் மணல் கடத்தல் இருவர் கைது; வாகனம் பறிமுதல்

டிராக்டரில் மணல் கடத்தல்இருவர் கைது; வாகனம் பறிமுதல் குளித்தலை, ஜன. 3-குளித்தலை அடுத்த, தளிஞ்சு பஞ்., மேலப்பட்டியை சேர்ந்தவர் ஜெய்சங்கர், 39, டிரைவர். காந்தி நகரை சேர்ந்த பாலதமிழ்செல்வன், 28, விவசாயி. நேற்று காலை, 8:00 மணியளவில் தளிஞ்சி மேலபட்டி பகுதியில், மணல் கடத்துவதாக நங்கவரம் எஸ்.ஐ., சரவணகிரிக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, தளிஞ்சி டி.மேலப்பட்டி கிட்டான் தோட்டம் சாலையில், அதிவேகமாக வந்த டிராக்டர் டிப்பரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அரசு அனுமதியில்லாமல் வாரி மணல் கடத்தியது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, வாகனத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை