உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தி.மு.க., பிரமுகர் வீட்டில் தேங்காய் திருடிய இருவர் கைது

தி.மு.க., பிரமுகர் வீட்டில் தேங்காய் திருடிய இருவர் கைது

குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார் நகர தி.மு.க., செயலாளர் ரவிச்சந்திரன், 69. இவருக்கு பணிக்கம்பட்டியில் தென்னந்தோப்பு உள்ளது. நேற்று காலை, 10:00 மணியளவில் தென்னந்தோப்பில், மேட்டுமருதுார் கிராமத்தை சேர்ந்த அஜித், 23, சின்னவர், 25, ஆகியோர் திருட்டுத்தனமாக தேங்காய்களை திருடினர். தட்டிக்கேட்ட ரவிச்சந்திரனை தகாத வார்த்தையில் திட்டினர். இது குறித்து, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து, இரண்டு வாலிபர்களையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ