உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டூவீலர் - கார் மோதிய விபத்தில் ஒருவர் காயம்

டூவீலர் - கார் மோதிய விபத்தில் ஒருவர் காயம்

அரவக்குறிச்சி: கரூர், தான்தோன்றிமலை, வடக்கு வீதி தெருவை சேர்ந்தவர் திருமூர்த்தி, 38. இவர், கரூர் மதுரை சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் தடாகோவில் பிரிவு அருகே வந்த போது, எதிர் திசையில் கர்நாடக மாநிலம், பெங்களூரு சூரிஹள்ளி 4வது கிராஸ் பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த்மதுல், 43 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், திருமூர்த்தி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த திருமூர்த்தியை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !