உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டூவீலர்கள் மோதல்: இருவர் படுகாயம்

டூவீலர்கள் மோதல்: இருவர் படுகாயம்

அரவக்குறிச்சி: இரண்டு டூவீலர்கள் மோதிய விபத்தில், இருவர் படுகாயம் அடைந்தனர்.அரவக்குறிச்சி அருகே தடாகோவில் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல், 43. இவர் நேற்று முன்தினம் இரவு கரூர் திண்டுக்கல் சாலையில், டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் புத்தாம்பூர் டெக்ஸ் பார்க் அருகே சென்றபோது, மண்மங்கலம் தாலுகா தாளப்பட்டி அருகே உள்ள மணல்மேடு பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி, 52, என்பவர் ஓட்டி வந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பின்னால் தங்கவேல் ஒட்டி வந்த டூவீலர் மோதியது. இந்த விபத்தில் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இருவரையும் மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை