மேலும் செய்திகள்
புகழூரில் விழிப்புணர்வு பேரணி
26-Oct-2025
பொறுப்பேற்பு
26-Oct-2025
சந்தையூர் வாரச்சந்தை ஆடு, கோழி விற்பனை
26-Oct-2025
சம்பா நெல் பயிர்களுக்கு நவ., 15க்குள் காப்பீடு
26-Oct-2025
அதிகளவு பாரம் ஏற்றிசெல்வதை தடுக்கணும்கரூர் நகரப்பகுதியில், சரக்கு வாகனங்களில் அதிகளவில் பாரங்களை ஏற்றி செல்கின்றனர். இதனால், வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, லாரிகள் அதிகம் செல்லும் திருச்சி, கோவை, ஈரோடு, வெங்கமேடு சாலைகளில், வாகனங்களில் சரக்குகளை மட்டுமல்ல, ஆட்களையும் ஏற்றி செல்கின்றனர். இதையும் போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வது இல்லை. கரூர் நகரப்பகுதியில், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், அதிகளவில் பாரம் ஏற்றி செல்வோர் மீது, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.சாக்கடை வாய்க்காலைதுார்வார வேண்டுகோள்கரூர் அருகே ராயனுார் பகுதியில், சாக்கடை வாய்க்கால் செல்கிறது. இதை சுற்றியுள்ள பகுதியில், 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் சாக்கடை வாய்க்காலில், செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை அதிகளவில் தேங்கியுள்ளதால், கழிவு நீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும், மழை பெய்யும் போது, சாலையில் கழிவுநீருடன் மழை நீரும் சேர்ந்து செல்கிறது. கழிவுகள் தேங்குவதால் ஏற்படும் சுகாதார கேட்டை தடுக்க, ராயனுார் பகுதியில் செல்லும் வாய்க்காலை துார்வாரி கழிவு பொருட்களை உடனடியாக அகற்ற, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சென்டர் மீடியன் உடைப்பைசரி செய்ய வலியுறுத்தல்கரூரில் வணிக நிறுவனங்கள், கிளை சிறை, தாலுகா அலுவலகம், தீயணைப்பு துறை அலுவலகம், கிளை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள, ஜவஹர் பஜார் பகுதியில், போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, சாலையில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. அதில், பல இடங்களில் வாகனங்கள் மோதியதில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சரி செய்யவில்லை. இதனால், உடைப்பு அதிகமாகி, சுவர் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. அதை புதுப்பிக்க வேண்டும் அல்லது பழைய சென்டர் மீடியனை இடித்து விட்டு, புதிதாக கட்ட, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
26-Oct-2025
26-Oct-2025
26-Oct-2025
26-Oct-2025