மேலும் செய்திகள்
பக்தர்கள் மீது மாடு தாண்டும் திருவிழா
05-Oct-2025
ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் விபரீத முடிவு
05-Oct-2025
அரசு பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
05-Oct-2025
சாக்கடை கால்வாயைசுத்தம் செய்ய வேண்டும்கரூர் அருகே, வாங்கல் சாலை பிரிவு பகுதியில் சாக்கடை கால்வாயில், குப்பை கழிவுகள் தேங்கி, செடிகள் அதிகளவில் முளைத்துள்ளன. இதனால், வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பல இடங்களில் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் கொசு உற்பத்தியும், துர்நாற்றமும் ஏற்பட்டுள்ளது. மேலும், கழிவுநீர் சாலையில் செல்லும் நிலை உள்ளது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள், குழந்தைகள் இரவு நேரத்தில், துாங்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால், சாக்கடை கால்வாயில் உள்ள முட்புதர்கள், கழிவுகளை அகற்ற, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாலையை ஆக்கிரமித்தசீமைக்கருவேல மரங்கள்கரூர் அருகே, கொளந்தானுாரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள மக்கள் காலைக்கடன்களை முடிக்கவும், துணி துவைக்கவும், குளிக்கவும் அமராவதி ஆற்றுப்பகுதிக்கு செல்கின்றனர். இதனால், கொளந்தானுாரில் இருந்து அமராவதி ஆற்றுப்பகுதிக்கு செல்ல, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது தார்ச்சாலையை மறைக்கும் அளவுக்கு சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் முளைத்துள்ளன. அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், ஆற்றுப்பகுதிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.பாலத்தில் 'ரிப்ளெக்டர்'அமைக்க வேண்டுகோள்கரூர் - வாங்கல் சாலையில் உள்ள குறுகிய பாலம், சில மாதங்களுக்கு முன் விரிவுபடுத்தப்பட்டது. இதை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், பாலத்தின் ஓரத்தில் தடுப்பு துாண்களும் அமைக்கப்பட்டது. இதில், கறுப்பு மற்றும் மஞ்சள் பெயின்ட் அடித்து, சிவப்பு நிறத்தில், 'ரிப்ளெக்டர்' அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் தடுமாறுகின்றனர். டூவீலர்களில் செல்கிறவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். இதுபோன்ற விபத்துகளை தடுக்க, துாண்களில் சிவப்பு நிறத்தில் உள்ள, 'ரிப்ளெக்டர்' வைக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025