சாக்கடை கால்வாயைசுத்தம் செய்ய வேண்டும்கரூர் அருகே, திருமாநிலையூரில் அரசு போக்குவரத்து பணிமனை பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில், குப்பை கழிவுகள் தேங்கியுள்ளன. மேலும், அதிகளவில் செடிகளும் முளைத்துள்ளன. வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பல இடங்களில் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் கொசு உற்பத்தியும், துர்நாற்றமும் ஏற்பட்டுள்ளது. மேலும், கழிவுநீர் சாலையில் செல்லும் நிலை உள்ளதால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தொற்றுநோய் அபாயத்தில் உள்ளனர். எனவே. சாக்கடை கால்வாயில் உள்ள செடிகள், கழிவுகளை அகற்றி, துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.குறுகிய பாலத்தால் அவதிவிரிவுபடுத்த கோரிக்கைகரூர் அருகே, கோம்புபாளையம் பஞ்சாயத்து, முனிநாதபுரத்தில் புகழூர் வாய்க்கால் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் வழியாக, பொதுமக்கள், காவிரியாறு மற்றும் புகழூர் வாய்க்கால் பகுதியில் உள்ள விவசாயிகள், விளை பொருட்ளை அந்த பாலத்தின் வழியாக எடுத்து செல்கின்றனர். ஆனால், பாலம் குறுகியதாக உள்ளதால், விளை பொருட்களை விவசாயிகளால் எடுத்துச்செல்ல முடியவில்லை. மேலும், டூவீலர்களில் செல்கிறவர்களும் பெரும் சிரமப்படுகின்றனர். இதனால், புகழூர் அருகே வாய்க்காலில் கட்டப்பட்டுள்ள பாலத்தை விரிவுப்படுத்த வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மாற்றுத்திறனாளிகளின்கழிப்பிடம் திறக்கணும்கரூர் அருகே, புலியூர் டவுன் பஞ்சாயத்து சார்பில், உப்பிடமங்களம் சாலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு என தனியாக கழிப்பிடம் கட்டப்பட்டது. இதை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கழிப்பிடம் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும், கழிப்பிடம் சிதிலமடையும் நிலையில் உள்ளது. எனவே, உப்பிடமங்களம் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான, கழிப்பிடத்தை திறக்க, புலியூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.