வெண்ணைமலை கொங்கு மேல்நிலை பள்ளி விளையாட்டு போட்டிகளில் அசத்தல்
கரூர், கரூரில், பள்ளி கல்வித்துறை சார்பில் தடகள போட்டி நடந்தது. அதில், கரூர் வெண்ணைமலை கொங்கு மேல்நிலைப்பள்ளி மாணவி கவுசிகா, 1,500 மீட்டர் ஓட்டம், 3,000 மீட்டர் ஓட்டம் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்து, மாநில அளவிலான தடகள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.மேலும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடந்த சிலம்பம் போட்டியில், 8ம் வகுப்பு மாணவி கனிஷ்கா, தொடர்ந்து இரண்டு மணி நேரம், 20 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். திருப்பூரில் சர்வதேச யோகா போட்டியில், 9ம்வகுப்பு மாணவி தனுஸ்ரீ, 13 வயது பிரிவில் முதலிடம் பெற்றார். கரூர் ரோட்டரி சங்கம் நடத்திய, நான்காவது தென்னக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், 6ம் வகுப்பு மாணவன் ரேவன் கண்ணா, கட்டாவில் முதலிடமும், கும்டி போட்டியில் மூன்றாம் இடமும் பெற்றுள்ளார். இதே போட்டியில், 9ம் வகுப்பு மாணவர் அஸ்வின் கிருஷ்ணா முதலிடமும், கும்டி போட்டியில் மூன்றாம் இடமும் பெற்றுள்ளார்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். பள்ளி தாளாளர் பாலுகுரு சுவாமி, தலைமை ஆசிரியர் சுரேஷ் உடனிருந்தனர்.