உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் /  வெண்ணைமலை கோவில் பிரச்னை: 9 கடைகளுக்கு சீல்

 வெண்ணைமலை கோவில் பிரச்னை: 9 கடைகளுக்கு சீல்

கரூர்: கரூர் அருகே, வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 507 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடங்களை மீட்கக் கோரி, உயர் நீதி-மன்ற மதுரை கிளையில், திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். அந்த இடங்களை மீட்க வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு, உயர் நீதி-மன்றம் உத்தரவிட்டது. முறையாக நடவடிக்கை எடுக்காததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதில், கோவில் நிலங்களை மீட்காவிட்டால், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்தது. அதன்படி, மீட்பு நடவடிக்கையில், ஹிந்து சமய அறநிலையத்துறையினர் ஈடுபட்டனர். கடந்த வாரம் குடியிருப்பு பகுதிகளுக்கு, 'சீல்' வைக்க வந்த போது, அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதால், அந்த பணியை ஹிந்து சமய அறநிலையத்துறையினர் தற்காலிகமாக நிறுத்தினர். இந்நிலையில் நேற்று காலை, 10:00 மணிக்கு, 42 கடைகளுக்கு 'சீல்' வைக்க அதிகாரிகள் வந்தனர். அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஹிந்து சமய அறநிலையத்துறை கரூர் உதவி ஆணையர் கணபதிமுருகன், பொதுமக்களிடம் பேச்சு நடத்தினார். இதில், கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி, அ.தி.மு.க., மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். எனினும், 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த பேச்சில் முடிவு எட்டப்படவில்லை. பின், மதியம், 1:00 மணிக்கு ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஒன்பது கடைகளுக்கு மட்டும் 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை