உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிராம பஞ்., செயலாளர்களை இடம் மாற்ற வேண்டும்: தமிழக அரசை வலியுறுத்தும் பஞ்., தலைவர்கள்

கிராம பஞ்., செயலாளர்களை இடம் மாற்ற வேண்டும்: தமிழக அரசை வலியுறுத்தும் பஞ்., தலைவர்கள்

கரூர்: கிராம பஞ்சாயத்து செயலாளர்களையும், மூன்று ஆண்டுகளுக்கு, ஒரு முறை இடமாற்றம் செய்ய வேண்டும் என, பஞ்சாயத்து தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த, 2019ல் டிசம்பர் மாதம், ஊரக பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. பிறகு கடந்த, 2020 ஜனவரி, 6 ல் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்பேற்று கொண்டனர்.அதில், கிராம பஞ்சாயத்துக்களின் நிர்வாகத்தை கடந்த, 2016 அக்டோபர் மாதம் முதல் ஐந்தாண்டுகள், தலைவர்கள் பொறுப்பில் இல்லாதபோது, செயலாளர்கள்தான் கவனி த்து வந்தனர்.மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட பஞ்சா யத்து, பஞ்சாயத்து யூனியன் மற்றும் டவுன் பஞ்சாயத்து செயலாளர்கள் அடிக்கடி மாற்றப்படுகின்றனர். ஆனால், ஒரே கிராம பஞ் சாயத்தில், செயலாளர் பல ஆண்டுகளாக பொறுப்பில் இருப்பது வழக்கம். பஞ்சாயத்து தலைவர்களுக்கு இணையாக, செயலாளர்களின் பொறுப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் மூலம், புதிதாக பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வருகிறவர்களுக்கு, உள்ளாட்சி துறை சட்டத்திட்டங்கள் பெரிதாக தெரிந் திருக்க வாய்ப்பில்லை. அதை பயன்படுத்தி கொண்டு, பஞ்சாயத்து செயலாளர்கள் முறை கேட்டில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், மூன்று ஆண்டுகளுக்கு, ஒரு முறை, பஞ்சாயத்து செயலாளர்களை இட மாற்றம் செய்ய வேண்டும் என, பஞ்சாயத்து தலைவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, பஞ்.,தலைவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்துகளில் நடக்கும் தவறுகள் வெளியே ஓரளவுக்கு தெரிகிறது. ஆனால், மத்திய, மாநில அரசுகளின் நிதி அதிகளவில் குவியும், கிராம பஞ்சாயத்துக்களில் நடை பெறும் முறைகேடுகள் வெளியே தெரிவது இல்லை.குறிப்பாக, கிராம பஞ்சாயத்துக்களில் புதிய குடிநீர் இணைப்புக்கு பணம் பெற்றுக் கொண்டு, பல செயலாளர்கள் ரசீது வழங்குவதி ல்லை. மேலும், சொத்து வரி வசூல் செய் வதில், செயலாளர்கள் அவர்களது இஷ்டம் போல் செயல்படுகின்றனர். இதனால், அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது.கிராம பஞ்சாயத்துகளில், அடுக்குமாடி கட்டிடங்களுக்கு முறைகேடாக பணம் வசூல் செய்யப்படுகிறது.கடந்த ஆண்டுகளில் பஞ்சாயத்து தலைவர்கள் பதவியில் இருக்கும் போதே, அவர் களுக்கு தெரியாமல், செயலாளர்கள் பல திட்டங்களை செயல்படுத்தி விடுகின்றனர். இதனால், இன்றும் முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் பலர் சிக்கலில் உள்ளனர்.இதனால், வருவாய் துறையில் இடமாற்றம் செய்வது போல, கிராம பஞ்சாயத்து செயலாளர்களையும் இடமாற்றம் செய்ய வேண்டும். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள, கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு, முன்பை விட வரும் காலத்தில், சட்டத் திட்டங்கள் குறித்த பயிற்சியை சிறப்பாக வழங்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ