உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிந்தலவாடியில் தேங்கிய கழிவு குப்பை அகற்றம்

சிந்தலவாடியில் தேங்கிய கழிவு குப்பை அகற்றம்

கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி பழைய நெடுஞ்சாலை பகுதியில் தேங்கிய, கழிவு குப்பை பொக்லைன் கொண்டு அகற்றப்பட்டது.கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பஞ்சாயத்து பகுதியில், சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் துாய்மை பணியாளர்களை கொண்டு கரூர்-திருச்சி பழைய மேம்பாலம் நெடுஞ்சாலை பகு-தியில் உள்ள, திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்தப்படும் இடங்களில் கொட்டப்படுகிறது.இங்கு கழிவு குப்பை அதிகம் தேங்கியதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதையடுத்து, பஞ்சாயத்து சார்பில் தேங்கிய கழிவு குப்பைகளை, முழுமையாக அகற்றும் வகையில் பொக்லைன் இயந்திரம் கொண்டு, குப்பை அகற்றி துாய்மை பணி மேற்கொள்-ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ