உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் ஓடிய கழிவு நீர்

சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் ஓடிய கழிவு நீர்

கரூர், நவ. 2-கரூர் அருகே, -சின்ன ஆண்டாங்கோவில் சாக்கடை கழிவு நீர் வெளியேறி, சாலையில் ஆறாக ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.கரூர், -சின்ன ஆண்டாங்கோவிலில் ஏராளமான குடியிருப்புகள், ஜவுளி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. ஆனால், அப்பகுதியில் போதிய சாக்கடை கால்வாய் வசதி இல்லை. பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சாயத்து நிர்வாகம் சரி செய்யாமல், அலட்சியமாக உள்ளது. இந்நிலையில், பல நாட்களாக சின்ன ஆண்டாங்கோவில் மெயின் ரோட்டில் சாக்கடை கால்வாயில் இருந்து, கழிவு நீர் வெளியேறி ஆறாக ஓடுகிறது. கடும் துர்நாற்றம் வீசியதால், அப்பகுதியினர், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். சாக்கடை கால்வாயில் இருந்து, கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க, கால்வாயை துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை