பெ.ஆ.,கோவில் தடுப்பணையில் நீர் வரத்து குறைந்தது
பெ.ஆ.,கோவில் தடுப்பணையில் நீர் வரத்து குறைந்ததுகரூர், அக். 29-கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு, தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 467 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆறு மற்றும் புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு தலா, 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 90 அடி கொண்ட அணை நீர்மட்டம், 87.04 அடியாக இருந்தது. கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 865 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 522 கன அடியாக சரிந்தது.மாயனுார் கதவணைகரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 7,635 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 5,709கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. டெல்டா பாசன பகுதிக்கு சாகுபடி பணிக்காக காவிரி யாற்றில், 4,509 கன அடி தண்ணீரும், மூன்று பாசன வாய்க்காலில், 1,200 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. ஆத்துப்பாளையம் அணைகரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார் வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 23.94 அடியாக இருந்தது. அணையில் இருந்து, நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறப்பு தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.