உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் மீண்டும் குடிநீர் குழாய் உடைப்பு லாரி தண்ணீருக்காக காத்திருக்கும் மக்கள்

கரூரில் மீண்டும் குடிநீர் குழாய் உடைப்பு லாரி தண்ணீருக்காக காத்திருக்கும் மக்கள்

கரூரில் மீண்டும் குடிநீர் குழாய் உடைப்புலாரி தண்ணீருக்காக காத்திருக்கும் மக்கள்கரூர், டிச. 29-கரூர் மாநகராட்சி குடிநீர் குழாய் மீண்டும் உடைப்பு ஏற்பட்டதால், மாநகராட்சி வினியோகம் செய்யும் டேங்கர் லாரி குடிநீருக்கு காத்திருக்க வேண்டிய அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.கரூர் மாநகராட்சி, 48 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள, 2.14 லட்சம் பேருக்கு தினமும், 290.74 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. மூன்று வாரத்திற்கு முன் காவிரி ஆற்றில் உள்ள கட்டளை நீரேற்று நிலையத்தில் குழாய் அடித்து செல்லப்பட்டதால், குடிநீர் வினியோகம் முற்றிலும் தடைப்பட்டது. அந்த நீரேற்று நிலையத்தில் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்ட நிலையில், மற்ற இடத்தில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் திணறி வருகின்றனர்.அதிலும், கரூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட தான்தோன்றிமலை நகராட்சி, சணப்பிரட்டி பஞ்., ஆகிய பகுதிகளுக்கு, கட்டளை நீரேற்று நிலையத்தில் இருந்துதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. காவிரி அதிகளவில் தண்ணீர் வரத்து இருந்ததால், நீரேற்று நிலையம் நீரால் சூழப்பட்டு, குழாய் அடித்த செல்லப்பட்டுள்ளது. இங்குள்ள, 15 வார்டுகளை சேர்ந்த, 18,000 குடியிருப்புகளில் குடிநீர் வினியோகம் முற்றிலும் தடைப்பட்டது.கடந்த வாரம், காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்ததால், நீரேற்று நிலையத்தில் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது. ஆனால், புலியூர் அருகில் தனியார் மொபைல் நிறுவனம் வயர் பதிக்க பள்ளம் தோண்டிய போது, மீண்டும் உடைப்பு ஏற்பட்டது. இப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த, 25 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் இல்லை. தான்தோன்றிமலை, காந்திகிராமம் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்துக்கு சென்று விட்டதால், வீடுகளில் உள்ள போர்வெல்களில் தண்ணீர் கிடைப்பதில்லை. பணம் கொடுத்து டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வாங்கும் நிலையில் உள்ளனர்.இதற்காக வாரம் தோறும், 1,800 முதல், 2,000 ரூபாய் வரை செலவாகிறது. இதற்கு வழியில்லாத ஏழை, நடுத்தர மக்களுக்காக, கரூர் மாநகராட்சி சார்பில் தனியார் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதை காத்திருத்து மக்கள் பிடித்து வருகின்றனர். மாநகராட்சியிடம் ஒரு டேங்கர் லாரி மட்டும் இருப்பதால், வாடகைக்கு எடுத்து குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர். அதுவும், குறிப்பிட்ட பகுதியில் மட்டும் விநியோகம் நடக்கிறது.கரூர் மாநகராட்சி கமிஷனர் சுதா கூறுகையில், ''கரூர் மாநகராட்சி, 4வது மண்டலத்தில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து குடிநீர் வினியோகம் தொடங்கி உள்ளது. புலியூரில் தனியார் மொபைல் நிறுவனம் சாலையோரம் இருந்த குழாய் உடைந்ததால், 3வது மண்டலத்தில் உள்ள வார்டுகளில் குடிநீர் வினியோகம் செய்வதற்காக, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி நடக்கிறது, விரைவில் பணிகள் முடிந்து தண்ணீர் சப்ளை செய்யப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை