உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்

கரூர்: கரூர் மாவட்டம், பெரிய வரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி, 58; டெக்ஸ் தொழிலாளி. இவர், கரூர் அருகே கோவிந்தம்பாளையத்தில் உள்ள, தனியார் டெக்ஸ் நிறுவனத்தில், 17 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.கடந்த, 9ல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ராமசாமி, வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்களின் வீடுகளுக்கும் ராமசாமி செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த ராமசாமியின் மனைவி நாச்சம்மாள், 45, போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி