உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மனைவி மாயம் கணவன் புகார்

மனைவி மாயம் கணவன் புகார்

கரூர், வேலாயுதம்பாளையம் அருகே,மனைவியை காணவில்லை என, போலீசில் கணவர் புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் கட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த மலையப்பன், 29; கூலி தொழிலாளி. இவரது மனைவி கிருத்திகா, 24; இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற கிருத்திகா, திரும்பி வரவில்லை. உறவினர்கள், பெற்றோர் வீட்டுக்கும் கிருத்திகா செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மலையப்பன் போலீசில் புகார் செய்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை