உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலை அரசு மருத்துவமனையில் சி.டி., ஸ்கேன் மையம் திறக்கப்படுமா?

குளித்தலை அரசு மருத்துவமனையில் சி.டி., ஸ்கேன் மையம் திறக்கப்படுமா?

குளித்தலை: குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஆனால், இந்த மருத்துவமனையில் பயன்பாட்டில் இருந்து வந்த, சி.டி., ஸ்கேன் கருவி, கடந்த, 6 மாதங்களுக்கும் மேலாக பழுதடைந்துள்ளது. இதனால், விபத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், கரூர், திருச்சி அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் சென்று, அதிகளவில் பணம் செலவழித்து மருத்துவ பரிசோதனை செய்துவரும் நிலை உள்ளது.இந்நிலையில், பழைய கட்டடத்தில் செயல்பட்டு வந்த, சி.டி., ஸ்கேன் மையம், புதிய கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.பொது மக்கள் பயன்பெறும் வகையில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட, சி.டி., ஸ்கேன் சென்டரை மாவட்ட நிர்வாகம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்