| ADDED : மே 29, 2024 07:18 AM
குளித்தலை : குளித்தலையில், மனைவியை அரிவாளால் வெட்டி, தன்னை தானே கழுத்தறுத்த கொண்ட கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த, அலகரை கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள், 45. தேங்காய் வெட்டும் கூலி தொழிலாளி. கடந்த, 16 மாலை, 6:40 மணியளவில் இவரது மனைவி தேன்மொழி, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணி செய்து விட்டு, பஸ்சில் இருந்து இறங்கி வந்தார்.குளித்தலை சுங்ககேட் மாணிக்கம் பழமுதிர்ச்சோலை பழக்கடையில், பழங்கள் வாங்கும் போது, தம்பதியர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், பெருமாள் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியின் தலை, உடல் பகுதியில் வெட்டி ரத்த காயம் ஏற்படுத்தினார்.பின்னர் பெருமாள் தனக்குத்தானே, தான் வைத்திருந்த அரிவாளால் கழுத்தை அறுத்துக் கொண்டார். படுகாயம் அடைந்த இருவரையும், போலீசார் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் தம்பதிகள் சேர்க்கப்பட்டனர். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பெருமாள் உயிரிழந்தார். இது குறித்து அவரது தம்பி ஆறுமுகம். 43, கொடுத்த புகார்படி குளித்தலை போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.