உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / எள் உதிர்க்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்

எள் உதிர்க்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்

கிருஷ்ணராயபுரம், : பஞ்சப்பட்டி வட்டார பகுதிகளில், மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள எள் செடிகள் அறுவடை செய்யப்பட்டு, பிரித்தெடுக்கும் பணியில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டி வட்டாரத்திற்கு உட்பட்ட போத்துரவூத்தன்பட்டி, வடுகப்பட்டி, திருமேனியூர், வயலுார், சரவணபுரம், குழந்தைப்பட்டி, பாப்பகாப்பட்டி ஆகிய பகுதிகளில் இரண்டாம் கட்டமாக, மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட எள் அறுவடை பணிகள் துவங்கி நடந்து வருகிறது. மழையால் அறுவடை பணியில் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது மழை நின்றதால், மீண்டும் எள் அறுவடை பணி நடந்து வருகிறது. அறுவடை செய்யப்பட்ட எள் செடிகளை வெயிலில் உலர்த்துவதற்கான பணிகள் நடக்கிறது. பின்னர் எள் உதிர்க்கும் பணிகளும் நடந்து வருகிறது. மழை பெய்வதற்கு முன்பு பணிகளை முடிக்க தொழிலாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை