உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குடிநீர் குழாய் சரி பார்க்கும் பணியில் தொழிலாளர்கள்

குடிநீர் குழாய் சரி பார்க்கும் பணியில் தொழிலாளர்கள்

கிருஷ்ணராயபுரம்: மத்திப்பட்டி சாலையில், காவிரி குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி பார்க்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த கொம்பாடிப்பட்டி, மத்திப்பட்டி பிரிவு சாலை வழியாக, காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் செல்-கிறது. இதில், சிந்தலவாடி ஆற்றில் இருந்து காவிரி நீர், குழாய் வழியாக கொண்டு செல்லப்பட்டு, கிராம மக்களுக்கு வினி-யோகம் செய்யும் பணி நடக்கிறது. தற்போது மத்திப்பட்டி சாலை பிரிவு அருகில், காவிரி குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு, கடந்த இரண்டு நாட்களாக அதிகமான காவிரி நீர் வீணானது.இந்நிலையில், நேற்று காலை குடிநீர் குழாய் பராமரிப்பு தொழி-லாளர்கள், விரிசல் அடைந்த குழாய் உடைப்பு பகுதியை, சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். மேலும் சேதமடைந்த பழைய குழாயை மாற்றி விட்டு, புதிய குழாய் அமைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை