மேலும் செய்திகள்
பெண் தொழில் முனைவோரை உருவாக்க பயிற்சி
31-Oct-2025
கரூர், கரூர், எம். குமாரசாமி பொறியியல் கல்லுாரி வளாகத்தில், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் பயிலரங்கம் நடந்தது.கல்லுாரி தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணிபுரியும், தொழில் முனைவோர் பிரிவு ஒருங்கிணைப்பாளர்களுக்கு தொழில் முனைவு மற்றும் புத்தாக்கம் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது. இதனை, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் பயிற்சியாளர் விஜயகுமார் ரங்கசாமி வழங்கினார்.அவர், மாணவர்களிடத்தில் தொழில் முனைவுத் திறன் மனப்போக்கை உருவாக்குவதன் அவசியம், தொழில் முனைவு மற்றும் புத்தாக்கம் தொடர்பான பண்புகளை வளர்க்கும் வகையிலான பயிற்சியை வழங்கினார். மேலும், கல்வி நிறுவனங்களில் தொழில் முனைவு மற்றும் புதுமை சார்ந்த செயல்பாடுகளை, திறம்பட செயல்படுத்துவதற்கான பல பயனுள்ள கருத்துகளையும் வழிமுறைகளையும் கூறினார்.நிகழ்ச்சியில், கல்லுாரி இணை செயலாளர் சரண்குமார், நிர்வாக இயக்குனர் குப்புசாமி, முதல்வர் முருகன், பேராசிரியர் சுந்தரராஜு, சிமியோன்ராஜ், மாவட்ட திட்ட மேலாளர், மாவட்ட மைய ஒருங்கிணைப்பாளர், ராம்பிரதாப் உள்பட பலர் பங்கேற்றனர்.
31-Oct-2025