ஊராட்சி ஒன்றியங்களில் காலியாகவுள்ள பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
கரூர், ஊரக வளர்ச்சி துறையில், ஊராட்சி ஒன்றியங்களில் காலியாகவுள்ள ஓட்டுனர், பதிவறை எழுத்தர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் அரவக்குறிச்சி, க.பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் ஊராட்சி ஒன்றியங்களில் ஓட்டுனர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் காலிப்பணியிடங்கள் இனசுழற்சி மூலம் நிரப்பப்படுகிறது. இது தொடர்பான விபரங்கள் www.tnrd.gov.inஎன்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த இணையதள முகவரி வழியாக விண்ணப்பிக்கலாம். இணையதள வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். வரும், 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.