மருத்துவமனையில் இளம்பெண் சாவு: குடும்பம் நடத்திய தொழிலாளி ஓட்டம்
சென்னிமலை,சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தை சேர்ந்தவர் மூர்த்தி. கூலி தொழிலாளியான இவர், திருமணமாகி மனைவியை பிரிந்து வசித்து வந்தார். வினோதினி, 35, என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு சென்னிமலை டவுன் ஐயப்பன் கோவில் தெருவில் வசித்து வந்தார்.வினோதினிக்கு திடீரென உடல்நிலை பாதித்தது. ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மூர்த்தி சேர்த்துள்ளார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை மோசமடைந்தது. மேல் சிகிச்சை தேவைப்பட்டதால் கூடுதலாக தொகை செலவு செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மருத்துவமனையில் இருந்து தலைமறைவானார்.பெண்ணை கவனிக்க யாரும் இல்லாததால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற நிலையில் இறந்தார். இறந்த வினோதினி எந்த ஊர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.