எருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
எருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்கிருஷ்ணகிரி, :கிருஷ்ணகிரி அடுத்த அம்மனேரியில், பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று எருது விடும் விழா நடந்தது. இதில், கிருஷ்ணகிரி, வேலுார், திருப்பத்துார், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள், அருகிலுள்ள கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட காளை மாடுகள் கலந்து கொண்டன. கால்நடைத்துறையினரால் மாடுகள் பரிசோதிக்கப்பட்ட பின்னர், வரிசைக்கான டோக்கன் வழங்க பட்டு, ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. ஒரு சில காளைகள் பார்வையாளர் பகுதிக்குள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளில், குறிப்பிட்ட நேரத்திற்கு முன் வேகமாக எல்லையை கடந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள், டூவீலர்கள் மற்றும் பரிசுப்பொருட்கள் என, முதலில் வந்த, 101 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதை, கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊர்மக்கள் செய்திருந்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.