தேர்வறையில் மாணவியிடம் சில்மிஷம்அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
தேர்வறையில் மாணவியிடம் சில்மிஷம்அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைதுகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அருகே, தேர்வு எழுத சென்ற பிளஸ் 2 மாணவியிடம், சில்மிஷத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர், போக்சோவில் கைது செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி அருகிலுள்ள, தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தவர், 17 வயது மாணவி. இவருக்கு அஞ்சூர் - ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் அங்கு நடந்த உயிரியல் தேர்வை மாணவி எழுதியுள்ளார். தேர்வு மைய மேற்பார்வையாளராக வேப்பனஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியராக பணியாற்றும், போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டியை சேர்ந்த ரமேஷ், 41, இருந்துள்ளார்.மாணவியிடம், ஹால் டிக்கெட் எண்ணை சரிபார்ப்பது போல் நின்று, மாணவி மீது கை வைத்தவாறு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து மாணவி, அவர் பயிலும் பள்ளி முதல்வரிடம் கூறியுள்ளார். அவர், தேர்வு மைய பொறுப்பாளரான மேகலசின்னம்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பர்கூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.நேற்று முன்தினம் இரவு, ஆசிரியர் ரமேஷிடம், போலீசார், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சரவணன் விசாரணை நடத்தினர். அதில் தேர்வு எழுதிய மாணவியிடம் ஆசிரியர் ரமேஷ், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும், அதே அறையில் மற்றொரு மாணவியிடமும் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரிந்தது. மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சரவணன், பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகார் படி, ஆசிரியர் ரமேஷை, போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளில் தொடரும் பாலியல் சீண்டல் புகார்களால் அதிர்ச்சியடைந்துள்ள பெற்றோர் மற்றும் பொதுமக்கள், அரசு உரிய விளக்கமும், அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங்கும் கொடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.தொடரும் சம்பவங்கள்கடந்த, 2024 ஆக.,ல் கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே தனியார் பள்ளியில் நடந்த போலி என்.சி.சி., முகாமில் மாணவியருக்கு, பயிற்சியாளர் பாலியல் தொந்தரவு கொடுத்த நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து, 4 பள்ளிகளில் போலியாக என்.சி.சி., முகாம் நடத்தியது, அவர்களுக்கு உதவியது என, 18 பேரை கைது செய்தனர். போலி என்.சி.சி., பயிற்சியாளர் சிவராமன் கைதான நிலையில், உடல்நிலை பாதித்து இறந்தார்.* போச்சம்பள்ளி அருகே நடுநிலைப்பள்ளியில், 8ம் வகுப்பு மாணவியை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த, அதே பள்ளி ஆசிரியர்கள் ஆறுமுகம், 48, சின்னசாமி, 57, பிரகாஷ், 37, ஆகியோரை பிப்., 5ல் பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.* காவேரிப்பட்டணம் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு மாணவரை கடந்த பிப்., 1ல் ஒரு திருமண மண்டபத்தில் வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்த, ஆங்கில ஆசிரியர் உசேன், 40, என்பவர் கடந்த பிப்., 14ல் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசாரால் கைதானார்.