உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இருவேறு இடங்களில் மின்சாரம் தாக்கி தொழிலாளிகள் இருவர் உயிரிழப்பு

இருவேறு இடங்களில் மின்சாரம் தாக்கி தொழிலாளிகள் இருவர் உயிரிழப்பு

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, கூரம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 45; இவரது நிலத்திலிருந்த நாகமரத்தை காவேரிப்பட்டணம், மோட்டுப்பட்டியை சேர்ந்த முனியப்பன், 53, என்பவர் விலைக்கு வாங்கி உள்ளார். நேற்று முன்தினம் கூரம்பட்டியில் மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் முனியப்பன் விற்பனைக்கு எடுத்து செல்ல, நாகமரத்தை ஆட்களை வைத்து வெட்டியுள்ளார். அப்போது மரம் இருந்த பகுதியில் சென்ற மின் வயர் துண்டாகி-யது. அதை மாலை, 5:00 மணியளவில், மோட்டுப்பட்டியை சேர்ந்த தொழிலாளி அண்ணாமலை, 46, இணைத்துள்ளார். அப்-போது மின் இணைப்பு வந்தபோது, மின்சாரம் தாக்கி அண்ணா-மலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். போச்சம்பள்ளி அடுத்த, பாளேகு-ளியை சேர்ந்த மேஸ்திரி முருகன், 40; நேற்று முன்தினம் பாரூர், முருங்கம்பட்டியை சேர்ந்த அமுதா, 38, என்பவரின் பழைய தொகுப்பு வீட்டை புதுப்பிக்கும் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது, சுவற்றில் இருந்த மின் ஒயரில் கசிந்த மின்சாரம் முருகன் மீது பாய்ந்ததில் துாக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ