மேலும் செய்திகள்
பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா பயிற்சி
20-Jul-2026
கனிமங்கள் கடத்தியதாக 3 வாகனங்கள் பறிமுதல்
20-Jul-2026
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு
20-Jul-2026
மாற்று கட்சியினர் காங்., கட்சியில் இணையும் விழா
20-Jul-2026
கிருஷ்ணகிரி: தேய்பிறை அஷ்டமியையொட்டி, காலபைரவர் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன.கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியிலுள்ள காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரகம் உள்ளிட்ட ஹோமங்களும், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. பகல், 12:00 மணிக்கு, கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.இதில், ஏராளமான பெண்கள் பூசணியில் விளக்கேற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, 165 கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன்குட்டையிலுள்ள தக்சண காலபைரவர் கோவில் மற்றும் கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.
20-Jul-2026
20-Jul-2026
20-Jul-2026
20-Jul-2026