உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வருவாய் துறை அலுவலர்கள்கண்டன ஆர்ப்பாட்டம்

வருவாய் துறை அலுவலர்கள்கண்டன ஆர்ப்பாட்டம்

வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் பாப்பிரெட்டிப்பட்டி,பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகம் முன், தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார பொறுப்பாளர் தனி தாசில்தார் ஜெயசெல்வம் தலைமை வகித்தார். இதில், வருவாய் அலுவலர்களுக்கு உயர் அலுவலர்கள் தரும் அதீத பணி நெருக்கடிகளை களைந்திடவும், வருவாய் அலுவலர்களின் பல்வேறு கோரிக்கைகளை, அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது. வட்டார பொறுப்பாளர்கள் கார்த்திக், முருகன், குமரேசன் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ