உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கல்லூரி மாணவியருக்கு தொல்லியல் கருத்தரங்கம்

கல்லூரி மாணவியருக்கு தொல்லியல் கருத்தரங்கம்

கிருஷ்ணகிரி:கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், நேற்று ஊத்தங்கரை அதியமான் மகளிர் கல்லுாரி மாணவியர், 35 பேருக்கு, ஒரு நாள் தொல்லியல் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில், அருங்காட்சிய காப்பாட்சியர் கோவிந்தராஜ், தொல்லியல், வரலாற்றுக்கு முற்பட்ட காலம், கல்வெட்டியல், கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை போன்றவற்றை விளக்கிக்கூறி, தமிழ் எழுத்துக்களின் தோற்றம், கல்வெட்டுகளைப் படியெடுத்து படித்தல் ஆகியவற்றை கற்பித்தார். பின் அம்மாணவியர் தாளாப்பள்ளி பாறை ஓவியங்களை காண, மரபு நடைபயணமாக அழைத்து செல்லப்பட்டனர். கல்லுாரி பேராசிரியர்கள் சீதா மற்றும் புனிதா, மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், மாருதி மனோகரன், அருங்காட்சியக பணியாளர் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை