மகாதேஸ்வரா சுவாமிகோவில் தேரோட்டம்
மகாதேஸ்வரா சுவாமிகோவில் தேரோட்டம்ஓசூர்:தேன்கனிக்கோட்டை அருகே அகலக்கோட்டை - கல்லுப்பாலம் கிராமங்களுக்கு இடையே, மகாதேஸ்வரா சுவாமி கோவில் உள்ளது. இங்கு மஹா சிவராத்திரியையொட்டி கடந்த, 25ல் தேர்த்திருவிழா துவங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு ருத்ராபிஷேகம், சிறப்பு ஹோமங்கள், 10:30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து தேர் வடம் பிடித்து இழுத்தனர். இரவு, 8:00 மணிக்கு அக்னிகுண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. அகலக்கோட்டை, கல்லுப்பாலம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி இன்று காலை, 7:30 மணிக்கு எருது விடும் விழா, பல்லக்குஉற்சவம், நாதஸ்வர கச்சேரி, ஹரிகதை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.