மேலும் செய்திகள்
தீயில் கருகி பெண் பலி
24-Mar-2025
மாணவி உட்பட இருவர் மாயம்கிருஷ்ணகிரி:போச்சம்பள்ளி அடுத்த சந்துாரை சேர்ந்தவர் மோனிகாஸ்ரீ, 19. கந்திகுப்பத்திலுள்ள தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு பி.சி.ஏ., படித்து வந்தார். நேற்று முன் தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.இது குறித்து மாணவியின் பெற்றோர் போச்சம்பள்ளி போலீசில் புகார் அளித்தனர். அதில், போச்சம்பள்ளி அடுத்த வெப்பாளம்பட்டியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி வெங்கடேசன், 24, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி, போலீசார் விசாரிக்கின்றனர். கிருஷ்ணகிரி அடுத்த திப்பனப்பள்ளியை சேர்ந்த மூதாட்டி முனியம்மாள், 71. கடந்த, 4ல், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர் புகார்படி, குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Mar-2025