உயர்வுக்கு படி நிகழ்ச்சியால் மாணவியருக்கு சிறந்த எதிர்காலம்
கிருஷ்ணகிரி: ''மாணவியருக்கு, 'உயர்வுக்கு படி' நிகழ்ச்சி மூலம் மாணவிய-ருக்கு சிறந்த எதிர்காலம் அமையும்,'' என, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு பேசினார்.கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 'நான் முதல்வன்' திட்டத்தில், பிளஸ் 2 முடித்து பட்டப்படிப்பு சேராத மாணவர்களுக்கான உயர்கல்வி சேர்வதற்கான, 'உயர்வுக்கு படி' விழிப்புணர்வு நிகழ்ச்சியை, மாவட்ட கலெக்டர் சரயு துவக்கி வைத்து பேசியதாவது:பிளஸ் 2 வகுப்பில், தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வு எழுத தவறிய-வர்கள் அல்லது தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்-காமல் இருக்கும் மாணவ, மாணவியரை ஊக்குவித்து உயர்கல்-வியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்த, உயர்வுக்கு படி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. முதல்கட்டமாக இன்று, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் துவக்கி வைக்-கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக வரும், 13ல் ஓசூர் ஆர்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பிளஸ் 2வகுப்பு முடித்த மாணவ, மாணவியரில் உயர்கல்வி பயில சேர்ந்துள்ள மாணவர்கள் குறை-வாக உள்ளனர். மீதமுள்ள மாணவர்களை உயர்கல்வி பயில ஏது-வாக உயர்வுக்கு படி நிகழ்ச்சிகள் மூலம் அவர்களுக்கு விழிப்பு-ணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மாணவர்களுக்கு நிகராக மாணவி-யரும் இதில் கலந்து கொண்டு, பல்வேறு அறிவுரைகளை பெற்றால், அவர்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் அமையும்.இவ்வாறு, அவர் பேசினார்.கிருஷ்ணகிரி டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், ஆர்.டி.ஓ., பாபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்மலதா, மாவட்ட சி.இ.ஓ., மகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.