அ.தி.மு.க., பூத் கமிட்டி கூட்டம்
ஓசூர்: ஓசூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பாகலுாரில், அ.தி.மு.க., வடக்கு ஒன்றியம் சார்பில், 27 பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி தலைமை வகித்தார். ஓசூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் முன்-னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் பன்னீர்செல்வம் ஆலோசனை வழங்கி பேசினார். மாவட்ட துணை செயலாளர் மதன், எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் பொய்யாமொழி, மாவட்ட வக்கீல் அணி இணை செயலாளர் சசிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.