மேலும் செய்திகள்
எஸ்.பி., ஆபீசில் குறைதீர் முகாம்
29-Aug-2024
பள்ளி கல்வி இடைநிற்றல்: 4 சிறுவர் மீட்பு
03-Sep-2024
தர்மபுரி: தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தர்மபுரி பிரிவு சார்பாக, 2024 - 2025 ம் ஆண்டிற்கான, மாவட்ட அளவில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி மாவட்ட விளையாட்-டரங்கில், கலெக்டர் சாந்தி நேற்று தொடங்கி வைத்தார். தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானம், அரூர் மினி விளை-யாட்டரங்கம், தர்மபுரி செந்தில் மெட்ரிக் பள்ளி, செல்லியம்பட்டி துாய இருதயர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி விஜய் வித்யாலயா மகளிர் மேல்நி-லைப்பள்ளி, ராஜாஜி நீச்சல் குளம் உள்ளிட்ட இடங்களில் போட்டிள் நடக்கிறது. இதில், பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனா-ளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என, 5 பிரிவு-களில், 27 விளையாட்டுக்கள், 53 வகையான விளையாட்டு போட்-டிகள் நடக்கவுள்ளது. இதில், டி.ஆர்.ஓ., பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், எஸ்.பி., மகேஷ்வரன், தி.மு.க., - எம்.பி., மணி, பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஷ்வரன், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, ஆர்.டி.ஓ., காயத்ரி, சி.இ.ஓ., ஜோதிசந்திரா, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, அமைச்சூர் கபாடி சங்க தலைவர் பாஸ்கர் மற்றும் அலுவலர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
29-Aug-2024
03-Sep-2024