உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போச்சம்பள்ளி, மத்துாரில் சாரல் மழையால் மகிழ்ச்சி

போச்சம்பள்ளி, மத்துாரில் சாரல் மழையால் மகிழ்ச்சி

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி, சந்துார், புலியூர், புளியம்பட்டி, அகரம், அரசம்-பட்டி, சிப்காட் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலும், அதே போல் மத்துார், கண்ணன்டஹள்ளி, சிவம்பட்டி, கொடமாண்டப்-பட்டி, வாலிப்பட்டி, களர்பதி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிக-ளிலும் நேற்று காலை, 11:00 மணி வரை வெப்பத்தின் தாக்கம் இருந்தது. அதன் பின் மேக கூட்டத்துடன் அடிக்கடி விட்டு, விட்டு சாரல் மழை தொடர்ந்து பெய்து வந்தது. இதனால் கடந்த, 2 மாதங்க-ளாக அதிகளவு வெப்ப தாக்கத்தால் அவதியடைந்து வந்த மக்கள், நேற்று பெய்த சாரல் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போல் கிருஷ்ணகிரியிலும் நேற்று இரவு சாரல் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ